அன்புள்ளம் கொண்டதமிழக தமிழ் மக்களுக்கும் உலகில் உள்ள அணைத்து தமிழ் மக்களுக்கும் கடந்த 30 வருடங்களாக சிறந்த சேவை செய்ய வாய்ப்பு கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.
உலகில் தொன்மையான முதல் மொழியும், முதல் கலாச்சாரமும் பண்பாடும், மருத்துவமும், வானவியல் அறிவியல் , ஆன்மிகம், கணிதம்,விவசாயம், நீர் மேலாண்மை மற்றும் இன்னும் பல அறிவியல் சார்ந்த விஷயங்களை முதலில் இந்த உலகிற்கு உருவாக்கி அறிமுகம் செய்ததே நம் தமிழ் இனம் என்பதில் தமிழராய் நாம் பெருமை கொள்வோம்.
இறைவன் கொடுத்த மூச்சை பயிற்சி மூலம் அணைத்து நாடி நரம்புகளையும் தேவைக்கேற்ப கட்டுப்படுத்தவும் விரிவாக்கமடைய செய்யும் கலையையும் உருவாக்கி அதை செயல்படுத்தி சாதாரண மனிதர்களால் நினைத்து கூட பார்க்க முடியாத பல சாதனைகளும் சோதனைகளும் செய்து இந்த உலகிற்கு வழிகாட்டியாய் வாழ்ந்து காலமானவர்கள் நமது தமிழ் மரபு சித்தர்கள். 3000 வருடங்கள் வரை வாழும் கலையை கற்று வாழ்ந்தனர்.
பூமியில் அமர்ந்து கொண்டு தங்கள் தவ வலிமையால் உடலில் இருந்து ஆன்மாவை பிரித்து கதிரவன் முதல் சந்திரன் வரை அணைத்து கோள்களையும் கிரகங்களையும் 7 அண்டங்களையும் அக்கு வேறு அணி வேறாக அளந்து சகல விபரங்களையும் ஓலை சுவடிகள் மூலம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே விளக்கமாக எழுதி வைத்து விட்டு காலமாகினார்கள்.
நமது பாரதத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் நமது தமிழ் சித்தர்கள் திருவடிகள் படாத இடமே இல்லை. அதனால் தான் (5000) ஐயாயிரம் வருடத்திற்கு முன்பே நமது நாட்டின் தெற்கு பகுதி அனைத்திற்கும் திருவிடம் என்று பெயர் இருந்து வந்தது. அதுவே இப்போது வெள்ளையர்கள் மற்றும் நமது நாட்டின் துரோகிகளால் திராவிடம் என்று தவறாக மாற்றப்பட்டு அரசியல் நடந்து வருகிறது.
பல அயல் நாட்டு மன்னர்களும் துரோக திருட்டு கூட்டங்களும் 1000 வருடங்களாக சகல செல்வ வளமிக்க நமது நாட்டை சூறையாடி சென்ற மிச்சமும் எச்சமும் தான் நம்மிடம் உள்ள இன்றைய பொக்கிஷங்கள்.
இப்படி சூறையாட பட்டதில் நமது வாழ்வியலும் மருத்துவமும் விவசாயமும் அறிவியலும் கோவில் கட்டிடங்களும் விலை மதிக்க முடியாத புராதன தங்க ஆபரணங்களும் சிலைகளும், இன்னும் பலநவபாஷான கூட்டுக்களும் அடங்கும்.
இறைவன் அருள் பெற்ற சித்தர்களும், இறைவனே (தன்வந்திரி ) அருளிய மருத்துவமே சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவமும். நமது தமிழர்கள் சாதாரணமாக 120 முதல் 150 வருடம் வரை நலமுடன் வாழும் திறனோடு வாழ்ந்தார்கள். வயோதிகம் அல்லது மிருகங்கள் தாக்கி அல்லது பாம்பு கடித்து உயிரிழப்பது, இயற்கை சீற்றத்தால் உயிரிழப்பது . இப்படித்தான் பெரும்பாலான மக்கள் வாழ்ந்து காலமாகினர், வியாதி என்பதே பணம் என்ற ஒரு மாற்றுப்பொருள் வந்தபிறகே ஆரம்பித்தது.
நமது சித்தர்கள் ஆரோக்கிய வாழ்விற்காகவே மருத்துவம் தந்தனர், வருமுன் காப்பதே அவர் அருளிய மருத்துவம். காலப்போக்கில் வருமுன் காப்பது என்ற கூற்றே மருத்துவ உலகை விட்டு மறைந்து விட்டது.
நாம் உயிரோடு வாழ மூச்சு முக்கிய பங்கு வகிக்கிறது, இந்த ஒரு வேலை நடந்தால்தான் நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதே உண்மை. இந்த வேலையை நாமாக செய்கிறோமா அல்லது தானாக நடக்கிறதா? தானாக நடக்கிறது.. நாமாக செய்யவேண்டும் என்றால் என்னவாகும். தூங்கும் பொது மறந்துவிட்டால் மரணம். இதுதானே உண்மை. அப்படி என்றால் நம் அடிப்படை வாழ்வாதாரமான மூச்சுக்கே இறைவன் அல்லது நம்மை அல்லாத ஒரு சக்தி தேவைப்படுகிறது. அப்படியென்றால் மற்ற அனைத்துக்கும் அவன்தானே காரணமாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் நம் முன்னோர்கள் ஆன்மீகத்தை அடிப்படையாக நம் வாழ்வியலை வகுத்தார்கள்.
அடுத்து நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் உதவியால் தான் உயிர் இயங்குகிறது. இதையும் ஆன்மீகத்துக்குள் புகுத்தி புரிதலை கொடுத்தனர்.
இந்த பஞ்சபூதங்கள் இல்லாமல் நமக்கு நீரும் உணவும் கிடைக்காது. அப்படியென்றால் அவைகளையும் அரவணைத்து வணங்க செய்தார்கள். இப்படி அடிப்படை ஆதாரமான விஷயங்களை மறந்து, நான் எனது என்ற அகந்தை உள்ளே வரும்போது தான் மனம் கெடுகிறது. அடிப்படையை மறந்து பலவிதமான பொருள்கள், சிற்றின்பங்கள் மற்றும் பேராசைகளை வளர்த்துக்கொள்ளும் சூழ்நிலையில் தான் நமக்கு மன அழுத்தமும் பயமும் ஆரோக்கிய கேடும் உருவாகிறது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா. நம் வியாதிக்கும் துன்பத்திற்கும் பயத்திற்கும் மன அழுத்தத்திற்கும் சமூகத்தை சரியாக புரிதலோடு பார்க்க தெரியாத நாமே காரணமாகிறோம்.
இன்னும் இதை பற்றி விளக்க ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் உள்ளன. விரிவாக வேறு ஒரு பகுதியில் தொடர்வோம்.
இப்போது நமது சேவைகளை பற்றி பார்ப்போம். மக்களின் மன அழுத்தத்தையும், பயத்தையும் போக்கி எந்த வியாதியாக இருந்தாலும் உங்கள் ஒத்துழைப்போடு அதில் இருந்து முழமையாக விடுபட வைப்பதே நமது நோக்கம்.
என்னென்ன வியாதிகளில் இருந்து குணம் பெறலாம்? எந்த வியாதியாக இருந்தாலும் எல்லா வித வியாதிகளில் இருந்து முழுமையாக குணமடைந்து நலமாக வாழலாம்.
ஒவ்வொரு மனிதருக்கும் ரேகை வேறு வேறாக படைத்திருக்கிறான் இறைவன். அப்படி என்றால் ஒவ்வொருவரின் உடற்கூறும்,உடல் நிலையும் . மன நிலையும் வெவ்வேறாக தான் இருக்கும். இந்த உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி என்றால் ஒவ்வொருவருக்கும் வாழ்வியல் முறை உணவு முறை , செயல் முறை , தூங்கும் முறை போன்று அனைத்துமே வேறுபடத்தான் செய்யும். அப்படி என்றால் ஒரே மருந்து எப்படி எல்லோருக்கும் வேலை செய்யும் என்ற புரிதல் வேண்டும்.
சாதாரணமாக ஒரு குடும்பதித்தில் நான்கு பேர் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை அதிகம் பிடிக்கும். ஒரு குடும்ப உறுப்பினருக்குள் இப்படி வேறுபாடு இருக்கும் போது உலகில் உள்ள அணைத்து மக்களுக்கும் எப்படி ஒரே முறையான மருத்துவம் வேலை செய்யும்.
எனவே மருத்துவம் என்பது ஒவ்வொரும் மனிதருக்கும் வேறுபடும் என்பதை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை எது இருந்தாலும் மன அழுத்தம் இருந்தாலோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள். எங்கள் மருத்துவ குழுவில் இருந்து தங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான சேவைகளை செவ்வனே செய்வார்கள்.
நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை. உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் தங்கள் தகவல்களை எங்களுக்கு அனுப்பி வைத்து உங்கள் இடத்தில் இருந்தே தேவையான மருத்துவத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இறைவன் அருளால் உலகில் உள்ள எல்லா மக்களும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் நலமாக வளமாக வாழ இறைவனை பிரார்த்தித்து மகிழ்கிறோம்.
+91 8056786111
8056782333
Aroma Complex, 1st Floor, College Road, Karakudi - 630002.
drkkcure@gmail.com
"டைப் செய்ய தெரியாதவர்கள் வாட்ஸ் ஆப் (+91 8056782333) எண்ணுக்கு தங்கள் விபரங்களை பேசி அனுப்பி வைக்கவும். மேலும் விபரங்கள் தேவை என்றால் நாங்கள் தங்களை அழைத்து விபரங்களை சேகரித்து தங்களுக்கு தேவையான சேவைகளை செய்கிறோம்."